அட்டமாதிபன், சனி இவ்விருபரும் 1-4-5-7-9-10-11 ம் இடங்களிற் பலவான்களாக இருந்தாலும். ஆயுட்டானாதிபன் விசேஷயோகம் பெற்றுப் பலவானாக இலக்கினாதிபனின் நோக்கம் பெற்றாலும், ஆயுட்டானாதிபன் தன்னுடைய ஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கச் சனி கூடியிருந்தாலும், உதயலக்கின சந்திரலக்கினங்கள் சரராசிகளாகி அவ்விலக்கினாதிபர்கள் சரராசிகளில் இருந்தாலும், உதயலக்கின சந்திரலக்கினங்கள் ஸ்திரராசிகளாகி அவ்விலக்கினாதிபர்கள் உபயராசிகளில் இருந்தாலும்,உதயலக்கின சந்திரலக்கினங்கள் உபயராசிகளாகி அவ்விராசியதிபர்கள் ஸ்திரராசிகளில் இருந்தாலும், உதயலக்கினம் சரராசியாகி, இலக்கினாதிபனும் ஆயுட்டானாதிபனும் சரராசிகளில் இருந்தாலும்,உதயலக்கினம் ஸ்திர்ராசியாகி இலக்கினாதிபனும் ஆயுள் நாதனும் உபயராசிகளில் இருந்தாலும், உதயலக்கினம் உபயராசியாகி இலக்கினாதிபனும் ஆயுட்டலைவனும் ஸ்திரராசிகளில் இருந்தாலும், சந்திர லக்கினாதிபனும் ஆயுட்டானாதிபனும் ஒருவருக்கொருவர் மித்திரராக இருந்தாலும் இதுபோன்ற நிலமையில் பிறந்தவர் பூரணவயதில் மரணமடைவர்.
Tuesday, 25 February 2014
Monday, 24 February 2014
கிரக அமைப்பு
வேடிக்கையாக பேசுபவர் ( Those who talk humorously)
- இன்பத் தானாதிபனும் கேதுவும் கூடி வாக்குத்தானத்தில் இருக்க வாக்குத்தானாதிபன் திரிகோண கேந்திரங்களில் இருந்தாலும். வாக்குத்தானத்தில் சந்திரன் புதன் சுக்கிரன் இவர்களுடன் கூடியிருந்தாலும் இதுபோன்ற நிலைமையிற் பிறந்தவர் எந்நேரமும் வேடிக்கை வினோதமாகப் பேசுபவராய்க் கேட்போருக்கு விடாநகைப்பைக் கொடுப்பவராய் விளங்குவர்.
Subscribe to:
Posts (Atom)
