பன்னிருபாவங்கள் என்றால் என்ன? ஜன்மலக்கினம் முதலாகப் பன்னிரன்டாம் இடம் வரையும் உள்ள ஒவ்வொரு ஸ்தானங்களையும், அவ்வவற்றிற்குரிய அங்க உறுப்புக்களையும். சுகம் துக்கம் பாவம் லாபம் நஷ்டம் மாடு வீடு சத்துரு மித்திரு தாய் தந்தையர் தாரம் புத்திரர் ஆதியனவற்றையும், வாழ்கையின் இலட்சியங்களையும் வகுத்து, அவ்வவற்றிற்குரிய ஆதார நியாயங்களுடன் பலன் காண்பதற்கேற்றவிதமான 12 பலாபலன் பிரிவுகளேயாகும்.ஜன்மலக்கினமாவது ஒருவர் பிறக்கும் போதுகிழக்குத்திசையில் அடிவானத்தில் உதயமாகும் இராசியாகும்.
1ம் பாவம்.
உதயலக்கினம் இது ஜாதகரின் குணம், அறிவு, தேகம், நிறம், அழகு, ஞாபகம், கீர்த்தி, வயது, சந்தோசம், கவலை, தீர்மானம், மூளையின் நிலமை, அதிகாரம் இவைகளை அறிதற்குரிய ஸ்தானம்.
2ம் பாவம்
கல்வி, பொருள்வரவு, குடும்பம், வாக்கு, போசனம், முகம், பார்த்தல், பேசுதல் இவைகளை அறிதற்குரிய ஸ்தானம்.
3ம் பாவம்
கேள்வி, சகோதரர், வீரியம், வெற்றி, அன்பு, ஆபரனம், போகம், கடன், கழுத்து, காது, தோள், கைகள் இவைகளை அறிதற்குரிய இடம்.
4ம் பாவம்தாய், சிநேகிதர், உறவினர்கள், சுகம், பூமி, வீடு, வாகனம், வியாபாரம், மார்பு, முதுகு, இவைகளை அறிதற்குரிய இடம்.
5ம் பாவம்
இருதயம், புத்தி, புத்திரர், ஆலோசனை, சுயகல்வி, பூர்வபுண்ணியம், மந்திரம், சங்கீதம், யோகாப்பியாசம், கற்பம், பக்தி, திடசித்தம், ஆராய்ச்சி, நம்பிக்கை இவைகளை அறிதற்குரிய இடம்.
6ம் பாவம்
வயிறு, சத்துரு, சிறை, யுத்தம், கவலை, ரோகம், கள்வர், கடன், ஆயுதங்களினால் ஏற்படும் காயம் இவைகளை அறிதற்குரிய ஸ்தானம்.
7ம் பாவம்
மர்மஸ்தானம், தாரம், இன்பம், இச்சை, கல்யாணம், பிரியாநட்பு, ஒத்த உனர்ச்சி, பங்காளி, கூட்டுமுயற்சி இவைகளை அறிதற்குரிய இடம்.
8ம் பாவம்
குண்டிக்காய், மூலம், ஆயுள், நோய், தீராவியாதி, மரணம், துக்கம், ஆபத்து, மாங்கல்யம்(பெண்ஜாதகத்தில்), இவைகளை அறிதற்குரிய இடம்.
9ம் பாவம்
தயவு, சாந்தம், பொறுமை, பிதா, மாதா, பாக்கியம், தருமம், குரு, உபதேசம், தெய்வாராதனை, தேவாலயத் திருப்பணி, தீர்த்தயாத்திரை, தொடை, இவைகளை அறிதற்குரிய இடம்.
10ம் பாவம்
முழந்தாள், முயற்சி(தொழில்), கீர்த்தி, இவைகளை அறிதற்குரிய இடம்.
11ம் பாவம்
கனுக்கால், லாபம், மூத்த சகோதரர். இவைகளை அறிதற்குரிய இடம்.
12ம் பாவம்
கால், செலவு, நித்திரை, தூரதேச பயணம் இவைகளை அறிதற்குரிய ஸ்தானம்.
சுபம்

No comments:
Post a Comment